என்னைப்பற்றி…

பிப்ரவரி 26, 2010 at 1:59 முப (என்னைப்பற்றி...) (, , )

 

என்னைப்பற்றி…

என்னைப்பற்றி பெரிதாக சொல்லிக்கொள்ள ஒன்றுமே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஒரு கிராமத்தில் படித்து அங்கிருந்து நகர்ந்து நகரத்திற்கு வந்து அங்கு கொஞ்சம் படித்து(?) பின்பு ஒரு போராட்டத்திற்கு பிறகு ஓரளவு நல்ல வேளையில் அமர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி ஒரு நடுத்தர குடும்பமாக ஆகி இருக்கிறேன் அவ்வளவுதான். இதில் கொஞ்சம் போராட்டம், கொஞ்சம் மகிழ்ச்சி, கொஞ்சம் வருத்தம், கொஞ்சம் கொஞ்சம் அனைத்து உணர்ச்சிகளையும் அனுபவித்து / அனுபவித்துக்கொண்டு இருக்கிறேன். பதிவுலக அறிமுகம்… பதிவுகளைப்பற்றி பேச்சு அடிபட்டபோது எனக்கு அதில் ஒரு பெரிய ஆர்வம் இல்லை. அது என்ன என்று தெரிந்துகொள்ள எந்த முயற்சியும் செய்யவில்லை. செய்திகளை இணையத்தில் படிக்கும் போது ஒரு தளத்தில் தமிலிஷ் இன் விளம்பரத்தைப்பார்த்து (2006) அதுவும் மற்றொரு செய்தி தளம் என்ற ஒரு நினைப்பில் அதை அழுத்தப்போக அது அந்த தளத்திற்கு இட்டுச்சென்றது. அங்கு உள்ள பதிவுகளை படிக்க அதன் பின்பு ஒவோவோருவரின் பதிவாக தேடி தேடி ஆர்வம் உள்ள பதிவுகளை படித்தேன். அதிலிருந்து இதில் உள்ள நன்மை, தீமை, அரசியல், நாட்டு நடப்பு எல்லாம் அறிய முடிந்தது. பின்பு சிங்கைநாதன் சிகிச்சையைப்பற்றி படித்த போது சிங்கைபதிவர்களிடம் (அனைவரிடமும் அல்ல, நானும் இப்போது சிங்கையில்தான் இருக்கிறேன்) தொடர்புகொண்டு பேசினேன் (நண்பர் கோவி. கண்ணன் மற்றும் ஜோசப் பால்ராஜ்). பின்பு ஒரு பதிவர் கூட்டத்திற்கும் சென்று சிலரிடம் அறிமுகம் செய்துகொண்டேன். அதன் பின்பு நண்பர் கோவியிடம் தொடர்ந்து தொடர்பில் இருந்தேன் (எங்களது கலந்துரையாடல் ஒரு 1000 பக்கங்களுக்கு மேல் வரும் என்று நினைக்கிறேன்!!! அவர் ஒரு அல்ல அல்ல குறையாத சுரங்கம்). பல செய்திகள் / கருத்துக்கள் பற்றி விவாதம் தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் செய்துகொண்டிருந்தேன். அவரின் தீராத / தணியாத முயற்சியால் இப்போது எழுத ஆரம்பித்து இருக்கிறேன். இது எனக்கோ உங்களுக்கோ நல்ல நேரமா அல்லது ஒரு கேட்ட நேரமா என்பதை காலம் (கோவி அல்ல) பதில் சொல்லும் என்ற ஒரு நம்பிக்கையுடன் எழுதுகிறேன்.

என்ன எழுதுவது / என்ன எழுதப்போகிறேன்…

நமக்கு சாதரணமாக உள்ள ஒரு பெரும் பிரச்சினை இதுதான் என்று நினைக்கிறேன். இதிலிருந்து நான் விடுபட முதலில் எனது நோக்கத்தை முடிவு செய்யவேண்டும். அதை செய்ய முயற்சிக்கிறேன். நான் செய்ய முயற்சிப்பது உலகில் உள்ள எதைப்பற்றியும் (பொருள், கருத்து, சொல், உணர்ச்சி,…) ஒரு வரையறையை உருவாக்க முயல்கிறேன். ஆனால் எனக்குத் தெரிந்த வரையில் நம்மால் எதைப்பற்றியும் ஒரு முழு வரையறை செய்ய முடியாது என்பதுதான். இருந்தாலும் ஓரளவிற்கு நெருக்கமாக வரையறை செய்யலாம் என்று நினைக்கிறேன். அந்த வரையறை எந்த அளவிற்கு நெருக்கமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அது புகழ் பெறுகிறது, அது அறிவியலோ, இலக்கியமோ, மதமோ, கடவுளோ, நம்பிக்கையோ, உண்மையோ, இல்லை வேறு எதுவானாலும் சரி. இதுவே நான் என்ன எழுதப்போகிறேன் என்பதற்கான எனது நோக்கம்.

எப்பொழுது எழுதுவேன்….

எனக்குத் தெரியவில்லை, எப்போதெல்லாம் எனக்கு ஒரு சிந்தனை தோற்றம் பெற்று ஓரளவிற்கு வளர்கிறதோ அப்போது நேரம் கிடைத்தால் எழுதுவேன். அப்பொழுது நேரம் கிடைக்கவில்லை என்றால், எப்பொழுது கிடைக்கிறதோ அப்பொழுது எழுதுவேன். எனக்கு எந்த ஒரு கட்டுப்பாடையும் நான் விதித்துக்கொள்ளவில்லை.

எதற்கு எழுதவேண்டும்…

எனது சிந்தனைகளை தொகுத்துக்கொள்ளவே எழுத முடிவு எடுத்தேன். இதைத்தவிர வேறு ஏதாவது ஒரு கருத்து உங்களிடம் இருந்து எனக்கு சரி என்று தோன்றினால் அதையும் சேர்த்து ஒரு முழுமையின் அருகாமையில் வருவதற்கு விருப்பம்.

என்னுடைய படிப்பு (பிழைப்புக்காக படிக்கும் படிப்பைப்பற்றி அல்ல)…

எது கிடைத்தாலும் படிக்க ஆரம்பிப்பேன். அது சிறிது நேரத்தில் என்னைக்கவர்கிறதா இல்லையா என்பதைப்பொருத்து அது தொடர்வது இருக்கிறது.

எனது நன்றிகளுக்கு உரியவர்கள் (பதிவுலகத்தில்)…

நண்பர் கோவி மற்றும் நண்பர் தருமி மற்றும் நான் படித்த அனைத்து பதிவர்கள் (ஏறக்குறைய அனைவருமே). தருமி மற்றும் கோவி என்னுடன் நேரடியாக உரையாடி கருத்துக்களை பகிர்ந்து கொண்டு என்னை ஊக்கப்படுத்தியதற்காக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisements

23 பின்னூட்டங்கள்

 1. கோவி.கண்ணன் said,

  திவா,

  தொடக்கமே அசத்தலாக இருக்கு, எண்ணத்தில் உள்ளதை அப்படியே எழுத்தாக்கி இருக்கிறீர்கள். நல்லதொரு துவக்கம்.

  நல்வாழ்த்துகள்.

 2. Kishore said,

  நல்வருகை

 3. Cheena (சீனா) said,

  அன்பின் திவாகர்

  எழுட ஆரம்பிக்கும் முன்பே கொள்கைகளையும் விதி முறைகளையும் அழகாகத் தொகுத்து – திட்டமிட்டு – எழுத ஆரம்பிக்கும் முயற்சி வாழ்க !

  திட்டமிட்ட – நன்கு திட்டமிட்ட எச்செயலுமே எளிதில் வெற்ரி பெறும் என்பதில் ஐயமில்லை

  வெற்றி பெற நல்வாழ்த்துகள்

  நட்புடன் சீனா

 4. Joseph Paulraj said,

  Welcome to Blog world Diwakar Anna.

  //எனக்கு எந்த ஒரு கட்டுப்பாடையும் நான் விதித்துக்கொள்ளவில்லை.//

  This is Good decission. I welcome it.

  //ஆனால் எனக்குத் தெரிந்த வரையில் நம்மால் எதைப்பற்றியும் ஒரு முழு வரையறை செய்ய முடியாது என்பதுதான். இருந்தாலும் ஓரளவிற்கு நெருக்கமாக வரையறை செய்யலாம் என்று நினைக்கிறேன். அந்த வரையறை எந்த அளவிற்கு நெருக்கமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அது புகழ் பெறுகிறது, அது அறிவியலோ, இலக்கியமோ, மதமோ, கடவுளோ, நம்பிக்கையோ, உண்மையோ, இல்லை வேறு எதுவானாலும் சரி. //

  Since don’t have tamil typing available in office, will post my comment for this part after reached home.

 5. மங்களூர் சிவா said,

  welcome

 6. cablesankar said,

  வாழ்த்துக்கள் திவாகர். நிச்ச்யமா உஙக்ளால் சிறப்பாக எழுத முடியும் என்கிற நம்பிக்கை உங்கள் முதல் பதிவிலேயே தெரிகிறது. பதிவுலகம் உங்களை இருகரம் விரித்து வரவேற்க்கிறது. வருக..வருக..

 7. இராகவன், நைஜிரியா said,

  தமிழ் வலைப்பூ நல் உலகிற்கு வருகை தந்துள்ள நண்பர் திவாகர் அவர்களே வருக, வருக. உமது வருகையால் எமது வலையுலகம் பெருமையடைகின்றது.

  மேன் மேலும் வெற்றி பெற வாழ்த்துகள்.

 8. இராகவன், நைஜிரியா said,

  ஆஹா… முதல் இடுகையின் முதல் பின்னூட்டம்.

  சந்தோஷமா இருக்கு. இன்றைய நாள் இனிய நாள்

  • Diwakar Nagarajan said,

   நன்றி இராகவன்.

   நான் உங்களுக்கு புதியவனாக இருந்தாலும் நீங்கள் அனைவரும் எனக்கு முன்பே அறிமுகம் ஆனவர்கள் என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

 9. Diwakar Nagarajan said,

  எனக்கு வந்துள்ள பின்னூட்டங்கள் அனைத்தும் முத்த பதிவர்களிடம் என்பதை நோக்கும் பொழுது, நமது தமிழ் வலை உலகின் வளர்ச்சிக்கு காரணம் என்பது எளிதாக புரிகிறது.

  பின்னூட்டம் இட்ட நண்பர்கள் இராகவன், நைஜிரியா, கேபிள் அண்ணன், ஜோசப் ‘ அண்ணன்’, சீனா அண்ணன், கிஷோர், கோவி அவர்களுக்கு எனது நன்றிகள்.

 10. Vetrikkathiravan said,

  நல்வருகை

 11. சிங்கை நாதன் said,

  //நண்பர் கோவி மற்றும் நண்பர் தருமி//

  இருவரும் பெருந்தலைகளாயிற்றே ! தொடக்கமே பயமுறுத்துதே

  அன்புடன்
  சிங்கை நாதன்

  • Diwakar Nagarajan said,

   நண்பர் சிங்கை நாதன் அவர்களே நலமா, எனக்கு கோவி இன் நேரடி அறிமுகம் கிடைத்ததற்கு முதற்காரணம் நீங்கள்தான். அதிகமாக படித்துக்கொண்டிருந்த போதும் நேரடியாக தொடர்புகொள்ள ஒரு தயக்கம் இருந்துகொண்டே இருந்தது அதன் பின் உங்கள் உடல் நிலையைப்பற்றி அறிந்துகொள்ள எனது தயக்கத்தை விட்டு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அது நண்பர் குழலி, ஜோசப், பித்தன் வாக்கு, ஞானப்பித்தன், முகவை ராம் மற்றும் சிலரின் (மன்னிக்கவும் எனது குறைவான நினைவாற்றலுக்காக) மற்றும் தருமியின் மின்னஞ்சல் அறிமுகத்தை அதன் பின் தந்தது.

   இப்போது இந்த எழுத்துத் தொந்தரவு தர வந்துவிட்டேன். 🙂

 12. muru said,

  Hi Diwakar.,

  welcome to Singapore and Blog….

  • Diwakar Nagarajan said,

   அப்பாவி முரு அவர்களே,

   உங்கள் வருகைக்கு நன்றி. உங்களை ஒரு முறை நான் அங்க மோ கியோ நூலகத்தில் தக்காளி அறையில் கூட்டம் நடந்த போது பார்த்து இருக்கிறேன் என்று நினைக்கிறேன். அப்போது நான் வெளியில் நூல் தேடிக்கொண்டிருந்த போது நீங்கள் அங்கிருந்து வெளியில் வந்ததாக நினைவு (சிவப்பு நிற டி சட்டையுடன்). அப்போது அங்கு சந்திப்பு நடக்கிறது என்று எனக்கு தெரியாது. மறுநாள் பதிவில் பார்த்தபோதுதான் தெரிந்தது.

   குறிப்பு: நான் சிங்கைக்கு புதியவன் அல்ல ஏறக்குறைய பத்து ஆண்டுகளாக இங்குதான் இருக்கிறேன்.

 13. குசும்பு said,

  நிறைய “கொஞ்சம்” இருக்கும் முதலில் அந்த “கொஞ்சம்” எல்லாம் நிறைய கிடைக்கவாழ்த்துக்கள்:)

  கோவி நண்பரா நீங்க? அடடே ஆச்சர்யமா இருக்கு, அவரு நண்பரா இருந்தும் நல்லா எழுதுறீங்களே:)))

  • Diwakar Nagarajan said,

   வாருங்கள் குசும்பு, உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்கள் பெயருக்கேற்ற மறுமொழி…

 14. ஜீவ்ஸ் said,

  வாங்க… இது ரத்த பூமி. தெரிஞ்சுட்டு தானே வரீங்க… இல்லைன்னா. கோவியண்ணன் கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க..

  இப்படியெல்லாம் சொல்லி உங்களை பயமுறுத்தாம வரவேற்கிறேன். வந்து நல்லா எழுதுங்க. சீக்கிறம் உங்கள் புத்தக வெளியீட்டு விழாவில் சந்திப்போம்

  • Diwakar Nagarajan said,

   ஜீவ்ஸ், நன்றி. இந்த ரத்த பூமியைப்பற்றி நன்றாக அறிந்துதான் இதில் குதித்து இருக்கிறேன். 🙂

 15. அறிவிலி said,

  வாங்க.. திவாகர். வெல்கம்.

  (நான் முத்த பதிவர் அல்ல.. :-))))) )

  • Diwakar Nagarajan said,

   நன்றி அறிவிலி, எனக்கு ஒரே வரையறைதான் மூத்த பதிவருக்கு எனக்கு முன் இடுகை இட தொடங்கியவர்கள் அனைவரும் மூத்த பதிவர்தான். (அப்பத்தானே நாளை வரவிருக்கும் மற்றொரு பதிவருக்கு நான் மூத்தபதிவர் ஆகமுடியும் 🙂 )

 16. ரோஸ்விக் said,

  அண்ண பதிவுலகம் உங்களை இருகரம் விரித்து வரவேற்கிறது

  • Diwakar Nagarajan said,

   நன்றி ரோஸ்விக்.

Comments are closed.

%d bloggers like this: